பாம்பன் பாலம் தமிழ் கலாச்சாரத்தின் முத்து போன்றது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராமேஸ்வரம் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர்,
சிறப்பான ராமநவமி தினத்தில் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்திருப்பதாக தெரிவித்தார்.
தமிழ் கலாச்சாரத்தின் முத்து பாம்பன் பாலம் எனப் புகழாரம் சூட்டிய அஸ்வினி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்காக 7 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு 8 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.