ராம நவமியையொட்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் அயோத்தி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி ராம நவமிக்கான கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோர் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். மேள தாளம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.