2015 முதல் 2022 வரை டெல்லி முதலமைச்சரின் பங்களாவைப் பராமரிக்க கெஜ்ரிவால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்ததாக பாஜக தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, முதலமைச்சரின் பங்களாவைப் பராமரிக்க 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை, அரவிந்த் கெஜ்ரிவால் மொத்தம் 29 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரிக்க டெல்லி அரசிடம் முறையிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.