வட மாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இளையரசனேந்தலில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டத்தில் வட மாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் எதிர்க்கட்சிகள் குறித்து மாற்றுத் திறனாளிகளை தொடர்புப்படுத்திப் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.