பொறியியல் படிப்பை மாணவர்கள் நன்றாகப் படித்தால் விண்வெளி துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன்-3 திட்ட இயக்குனருமான வீரமுத்துவேல், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விண்வெளி துறையில் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் பொறியியல் படிப்பை நன்றாகப் படித்தால் விண்வெளி துறையில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்றும் வீரமுத்துவேல் கூறினார்.