சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து நடத்திய கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். மேலும், அமைச்சர்கள் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அணிகள் மற்றும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.