வடகொரியாவில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகச் சர்வதேச மாரத்தான் போட்டி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது உலக நாடுகளே ஊரடங்கிற்குள் சென்றன. இதனால் வடகொரியாவில் மாரத்தான் போட்டி நடைபெறவில்லை.
இந்த நிலையில், வடகொரியாவின் முதல் அதிபராக இருந்த கில் இல் சுங்கின் பிறந்த நாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தலைநகர் பியோங்யாங்கில் ஆறு வருடங்களுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.