தைவான் ஜலசந்தியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான், கடந்த 1949ல் தனி நாடாகப் பிரிந்தது. எனினும் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது.
இதனை தைவான் மறுத்துள்ள நிலையில், தைவானை தன்னுடன் இணைக்கும் வகையில் சீன ராணுவம் அவ்வப்போது போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.