சீனாவில் பறக்கும் டாக்சிகள் இயங்க தொடங்கியுள்ளன.
பிரபல பறக்கும் டாக்ஸி தயாரிக்கும் நிறுவனமான ஈஹாங் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹெஃபி ஹே ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பறக்கும் டாக்ஸிகளை இயக்க சீன சிவில் ஏவியேஷன் அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இந்தச் சூழலில், இரண்டு பயணிகள் முதன்முறையாகப் பறக்கும் டாக்ஸியில் அமர்ந்து பயணம் செய்தனர். இதன் மூலம் நகர்ப்புற சுற்றுப் பயணங்கள் மற்றும் வணிக பயன்பாடு எளிமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.