ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும், ஹமாசுக்கு ஆதரவாகச் செங்கடல் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
அதன்படி, அமெரிக்காவின் கப்பல் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.