மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தோன்றினார்.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி போப்பிற்கு மூச்சுக்குழாய் அலர்ஜி இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குணமடைந்த போப் பிரான்சிஸ் சில வாரங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், தொடர்ந்து 2 வாரங்களாக ஓய்வெடுத்த அவர், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி உரையாற்றினார்.