திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் சிறுமிகள் மற்றும் பெண்களின் வள்ளி கும்மி நடனத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
தாடிக்கொம்பில் அமைந்துள்ள சௌந்தர்ராஜா பெருமாள் கோயிலில் பவளக்கொடி கும்மியாட்ட நடன குழுவினர் சார்பில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சிறுமியர் முதல் முதியவர்வரை 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பச்சை நிறத்தில் ஆடை அணிந்து நடனமாடினர். முருகன், விநாயகர், பெருமாள் போன்ற தெய்வங்களை வாழ்த்திப் பாடி பெண்கள் நடனமாடியதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.