இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு என்ற ஒரு குழுவை உருவாக்கி, அதில் 3 ஆண்டுகள் ரயிலில் பயணம் செய்யும் பெண்களை உறுப்பினர்களாகச் சேர்த்து உள்ளதாகச் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த தாம்பத்தில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெண் பயணிகள் பாதுகாப்பிற்காகக் காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினார்.
மேலும், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த கையேடுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதில் அவசர உதவி எண், பெண்கள் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.