திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சாலையில் ரப்பர் தடுப்புகள் தீப்பற்றி எறிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
மலை சாலையின் 13-வது வளைவிற்கு அருகே உள்ள வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ, சாலையில் உள்ள ரப்பர் தடுப்புகளுக்கு பரவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் மலை சாலை முழுவதும் புகை மூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.