வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மரபு உணவுத் திருவிழா நடைபெற்றது.
சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில் 72 அரங்குகள் அமைக்கப்பட்டிருத்தன. இதில் குதிரைவாலி, சாமை, தினை, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.