கேரளா மாநிலம் மூணாறில் ஆபத்தை உணராமல் கார் கதவின் மீது அமர்ந்து பயணம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புகழ் பெற்ற சுற்றுலா தளமான மூணாறுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், மூணாறு டாப் ஸ்டேஷன் ரோட்டில் மலப்புரம் பதிவெண் கொண்ட காரில் வந்த சிலர் ஆபத்தான முறையில் காரின் கதவின் மீது அமர்ந்து பயணம் மேற்கொண்டனர்.
இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவர்கள் பயணம் செய்த வாகனத்தை மோட்டார் வாகன துறையினர் தேடி வருகின்றனர்.