நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் பாடநூலில் சேர்க்க வேண்டும் என நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
நம்மாழ்வாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில், இயற்கை விவசாயிகள் 11 பேருக்கு நம்மாழ்வார் விருதும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் நடிகர் செந்தரராஜா வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நம்மாழ்வாருக்கு மணிமண்டபமும், அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பாடநூலில் சேர்க்கவும் அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.