ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பழுதானதாக வெளியான தகவல் தவறானது எனத் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தச் செங்குத்து பாலத்தை இறக்கும்போது பழுது ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இது தவறான தகவல் எனத் தெற்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகப் பொறியாளர்கள் கூறுகையில், காற்றின் காரணமாக, மின் விளக்குக் கேபிள் ஒயர் துண்டானதாகவும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக இருபுறமும் உள்ள பாலங்களை ஒரே நேர்கோட்டில் நிறுத்தாமல் ஏற்ற இறக்கமாக நிறுத்தி வைத்ததாகவும் விளக்கம் அளித்தனர்.
பின்னர் மின் ஒயர் கேபிள்கள் அகற்றப்பட்டு உடனடியாகப் பாலத்தை ஒரே நேர்கோட்டில் நிறுத்தி வைத்ததாகவும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இந்திய ஐ.டி மாணவர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பாலம் முழுக்க முழுக்க உறுதியானது என அவர்கள் தெளிவுபட கூறினர்.