தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், காசிக்கு இணையான பெருமையையும், சிறப்புகளையும் கொண்டதாகும்.
2006ஆம் ஆண்டு பிறகு காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறிவித்த தேதியில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, கும்பாபிஷேக வைபவம் கடந்த 3ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.