நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக 6 நிறுவனங்கள் மற்றும் 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கனிமவளங்களை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அரசுக்குச் சுமார் 5 ஆயிரத்து 832 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில், 6 நிறுவனங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 21 நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தாது மணல் முறைகேடு விவகாரத்தில் மொத்தம் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.