சென்னை தி.நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி, 10 மாடியாகக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, தியாகராய நகர் பாண்டி பஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டடத்துக்கு அனுமதி பெற்ற தனியார் நிறுவனம், விதிகளை மீறி 10 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டியுள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரிய தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தைச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நிராகரித்துள்ளது.
மேலும், கட்டடத்தை இடிப்பது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமது இல்லாமல் கட்டப்பட்ட தளங்களை எட்டு வாரங்களில் இடிக்க வேண்டும் எனப் பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10 மாடி கட்டடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.