வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலாளி மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இர்பான் என்பவர் பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழி மறித்துக் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டுத் தப்பி சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.