கேரள மாநிலம், பாலக்காடு அருகே பாட்டிலில் பெட்ரோல் தரமறுத்த பெண் ஊழியர் மற்றும் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பட்டாம்பியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பிற்கு காரில் வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த பெண் ஊழியரிடம் பாட்டிலில் பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளனர்.
அப்போது பெண் ஊழியர் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெண் ஊழியர் மற்றும் பெட்ரோல் பம்ப் மேலாளரைச் சரமாரியாக தாக்கி பெட்ரோல் வாங்கி சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.