திறப்பு தினம் அன்றே பாம்பன் புதிய ரயில் பாலம் பழுதடைந்ததாக எழுந்த புகாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,
பாம்பன் புதிய ரயில் பாலம் பழுதடையவில்லை என்றும், டெக்னாலஜியே அதுதான் என்றும் தெரிவித்தார்.
பாம்பன் பாலம் பழுதடைந்துவிட்டதாகச் சிலர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தார்.
பாலம் மீண்டும் இறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகக் கூறுவது துளியும் உண்மையில்லை எனவும் கூறினார்.