திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரைச் சௌமியா அன்புமணி வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கடந்த மார்ச் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இதில் பாமக மகளிரணியைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேசிய சௌமியா அன்புமணி, வரும் மே11-ம் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு வன்னியர் திருவிழா வெற்றி பெற வேண்டிச் சிறப்பு அழைப்பிதழ் வழங்கியதாகத் தெரிவித்தார்.