ராசிபுரம் அருகே சாலையோரம் இருந்த கடைக்குள் லாரி புகுந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து கிழங்கு மாவு ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.
நாமக்கல் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள பொம்மை கடையில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பெற்றோருடன் வந்த 5 வயதுக் குழந்தை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
5 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.