திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மதுரை காளியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொட்டியம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயிலில் 30 மற்றும் 31 அடி உயரமுள்ள இரண்டு தேர்களைப் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனர்.
ஓலைப்பிடாரியம்மன், மதுரை காளியம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். தொடர்ந்து, 2 மணி நேரம் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியைச் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.