விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர் ஒருவர் 50 அடி உயரத்தில் பறவை காவடி எடுத்து பரவசத்தை ஏற்படுத்தினார்.
சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30ஆம் தேதி பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கயர்குத்து திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி வந்து அம்மனை தரிசித்த நிலையில், ராட்சத கிரேன் மூலம் பக்தர் பறவை காவடி எடுத்து 50 அடி உயரத்தில் பறந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.