வடகாஞ்சி மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டத்தில் அமைச்சர் நாசர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வடகாஞ்சி என்று அழைக்கப்படும் ஏகாம்பரநாதர் கோயிலில், கடந்த 2ஆம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சிவபெருமான், அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். முக்கிய வீதிகளில் வந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.