திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகம் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட மிளகு கூடுதல் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்ணக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட மிளகு அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகு தற்போது 300 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதேபோல், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட, காய்ந்த மிளகு தற்போது 900 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.