தென்காசி மாவட்டம் கடையம் அருகே நியாய விலைக் கடையில் வாடிக்கையாளர்களின் கண்முன்னே மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டல்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் வாடிக்கையாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் கண்முன்னே மூட்டை மூட்டையாக இருசக்கர வாகனத்தில் அரிசியைக் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.