அறிவியல் துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விஞ்ஞானி பிரபு கேட்டுக் கொண்டார்.
நீலகிரி மாவட்டம், உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பெங்களூரு விமான இயக்கவியல் குழு யு.ஆர்.ராவ், செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி.பிரபு ஆகியோர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞானி பிரபு, அறிவியல் துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.