தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுக்குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 7 நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.