குமரி அனந்தன் கடந்து வந்த பாதை!
Jul 26, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரி அனந்தன் கடந்து வந்த பாதை!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் வாழ்க்கை வரலாறு மற்றும் கடந்து வந்த அரசியல் பாதை குறித்து தற்போது காணலாம்.

குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரத்தில் கடந்த 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி, சுதந்திர போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்ட குமரி அனந்தன் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.

கிருஷ்ணகுமாரி என்பவரை வாழ்க்கை துணைவியாக கரம் பிடித்த குமரி அனந்தனுக்கு ஒரு மகனும், தமிழிசை சௌந்தரராஜன் உட்பட 4 மகள்களும் உள்ளனர்.

பின் நாட்களில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட குமரி அனந்தன், கடந்த 1977-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை எழுப்பிய குமரி அனந்தன், இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என உரக்க குரல் எழுப்பினார்.

காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய குமரி அனந்தன், கடந்த 1980-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும், 1984-ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியிலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னாட்களின் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்துக்கொண்ட குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 1989 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.

கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன், அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டார்.

இலக்கிய செல்வர் என அனைவராலும் போற்றப்பட்ட குமரி அனந்தன், கலித்தொகை இன்பம், படித்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

தருமபுரியில் பாரத மாதாவிற்கு கோயில் கட்ட வேண்டும், நதிகள் இணைப்பு, பனை மரத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளையும் இவர் மேற்கொண்டுள்ளார்.

இவரது அரசியல் மற்றும் மக்கள் சேவையை பாராட்டி கடந்த 2024-ம் ஆண்டு, தமிழக அரசு குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ என்ற விருது வழங்கி கௌரவித்தது.

அரசியலில் தான் எதிர்கொண்ட பின்னடைவுகளை பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்தி வந்த குமரி அனந்தன், தனது 93-வது வயதில் இயற்கை எய்தினார்.

Tags: Kumari Ananthan passed awayKumari Ananthan historyformer congress president
ShareTweetSendShare
Previous Post

கே.என்.நேரு சகோதரரிடம் 5 மணி நேரம் விசாரணை!

Next Post

போய் வாருங்கள் அப்பா… தமிழ் கற்றதனால் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதனால் தமிழ் பேசுகிறேன் – தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies