வக்ஃபு வாரிய திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்ததாக அரசிதழ் வெளியிட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து தற்போது சட்டமாக மாறியுள்ளது. இந்த நிலையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.