தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் சேகர் பாபுவின் மனைவிக்காக ஆகம விதிகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயிலில் லுக்கு, அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, தரிசனம் செய்தார். அப்போது அவரது வருகைக்காக வழக்கமாக நடை சாத்தப்படும் நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணிநேரம் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அம்மனுக்கு நடத்தப்படும் உச்சி கால பூஜையும் தாமதமானதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் உச்சிகால பூஜைக்காக தாங்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.