சென்னையில் உடலை கட்டுமஸ்தாக வைக்க ஜிம் பயிற்சியாளர் பரிந்துரை செய்த ஸ்டீராய்டு ஊசியை செலுத்தியதன் காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி. இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஜிம்மில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், உடலை கட்டுமஸ்தாக வைக்க ஜிம் பயிற்சியாளரின் ஆலோசனைபடி, அதிக அளவில் புரோட்டின் பவுடர் மற்றும் ஸ்டீராய்டு ஊசியை ராம்கி செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ராம்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு ஊசி செலுத்தக்கூறிய ஜிம் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.