அண்ணல் காந்தியடிகள் மீதும் தமிழ் மொழி மீதும் தீவிர பற்று கொண்டவர் குமரி அனந்தன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான குமரி அனந்தன் காலமானார் என்கிற செய்தி வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்ணல் காந்தியடிகள் மீதும் தமிழ் மொழி மீதும் தீவிர பற்று கொண்டவர் என்றும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரது உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், . அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.