திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாலை தாண்டும் திருவிழாவின்போது காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியதை காண திரளான மக்கள் குவிந்தனர்.
சடையம்பட்டியில் உள்ள கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் காளைகள் அனைத்தும் தாரை தப்பட்டை முழங்க அழைத்துச் செல்லப்பட்டன.
குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற சுமார் 400 க்கும் மேற்பட்ட காளைகள் ஒரே நேரத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காளைகள் போட்டி போட்டுக் கொண்டு இலக்கை நோக்கி சென்றன.