அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரின் மனுவைத் தள்ளுபடி செய்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணைக்கு ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சந்தேகத்தின் அடிப்படையிலேயே வழக்கு உள்ளதால் மனுவை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் மற்றும் ஆதாரம் உள்ளதாகத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து, பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.