கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து சிவனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வை ஒட்டி பேரூரில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.