30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.