12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனத்தை மீண்டும் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கான Aenocyon dirus எனப்படும் ஓநாய் இனம் 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே பூமியிலிருந்து முற்றிலும் அழிந்து போனது.
இந்நிலையில் கோலஸ்ஸால் பயோ சயின்சஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மீண்டும் டையர் இன ஓநாய்களை குளோனிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர்.
சுமார் 72 ஆயிரம் ஆண்டுகள் பழமையான டையர் ஓநாயின் மண்டை ஓட்டில் இருந்து டிஎன்ஏ பிரித்தெடுக்கப்பட்டு நாயொன்றின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த நாய் மூன்று ஆரோக்கியமான டையர் இனத்தைச் சேர்ந்த ஓநாய் குட்டிகளை ஈன்றுள்ளது. அவற்றுக்கு ரோமுலஸ், ரெமுஸ் மற்றும் கலீசி என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இது அறிவியல் உலகில் மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த செய்திக்கு கமெண்ட் செய்துள்ள எலான் மஸ்க், உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன யானை இனமான மாமத்தை மீண்டும் உருவாக்குமாறு கிண்டலடித்துள்ளார்.