திண்டுக்கல் மாவட்டம், சிறுமலைபுதூரில் பெய்த கனமழையால் ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்த நிலையில், 3 நாட்களாக மின் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 6-ம் தேதி சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சிறுமலை புதூரில் ஏராளமான மின் கம்பங்கள் சரிந்து விழுந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாட்களை கடந்தும் அப்பகுதியில் மின்வாரியம் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மின் விநியோகமின்றி மாணவ, மாணவிகள் உட்பட அப்பகுதி மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.