16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்யக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இளம் வயதினரை ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மெட்டா மேற்கொள்ளவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் சிறுவர்களைத் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயார்க் உட்பட 33 மாகாணங்கள், இந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தன
இதையடுத்து, சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை வரையறுக்க மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்யக் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோர் ஒப்புதல் இன்றி இளம் வயதினர் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்யவும், ஆபாசப் படங்கள் உள்ள பதிவுகளைச் சிறுவர்கள் பார்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதங்களில் இந்த புதிய கட்டுப்பாடு இன்ஸ்டாகிராம் செயலியில் சேர்க்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.