அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களிடம் தேசிய சிந்தனை ஏற்படுத்த செயல்பட்டவர் குமரி அனந்தன் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் இளைஞராக இருந்தபோது, கர்மவீரர் காமராஜரின் தொண்டராக தேசியத்தை வளர்க்க பெரும் தொண்டாற்றியவர் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களிடம் தேசிய சிந்தனை ஏற்படுத்த செயல்பட்டவர் குமரி அனந்தன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குமரி அனந்தன் மறைவிற்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
குமரி அனந்தனின் பிரிவால் வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்டோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்,