சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை 7.15 மணியளவில் தொடங்கியது. நான்கு மாட வீதிகளில் உலா வந்த தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.