வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தினமும் அங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த சூழலில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அங்குக் காட்டு யானை ஒன்று மலை அடிவாரத்தில் உலா வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், தண்ணீர் தொட்டியைக் கவிழ்த்து யானை தண்ணீர் குடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.