காஞ்சிபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எடமச்சி கிராமத்தில் உள்ள கல்குவாரியை அகற்ற வேண்டும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.
மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், பனை மரங்களில் பதநீர் மற்றும் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.