திருச்சி லால்குடி அருகே மதுபோதையில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கே.வி.பேட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் மதுபோதையில் அன்பில் மாரியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், பாண்டியன் தனது வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து சந்தோஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தை மீண்டும் பாண்டியனிடம் ஒப்படைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டியன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சந்தோஷ் குமாரை சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சந்தோஷ் குமாருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட பாண்டியனை தீவிரமாக தேடி வருகின்றனர்.